அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசு அலங்கார ஊர்தி குடியரசு தின விழாவில் இடம்பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்தி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது கடும் கண்டனத்திற்கு உரியது.
“அனல் பறக்கும் கவிதைகளால் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டிய மகாகவி பாரதியாருக்கும், தனது சொத்துக்களை விற்று பிறகு சுதேசி கப்பல் ஓட்டி சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனாருக்கும், ஆங்கிலேயருக்கு எதிராக வீரப்போர் புரிந்த முதல் பெண் அரசியான வேலுநாச்சியாருக்கும் இந்த தேசமும் காட்டும் நன்றி கடன் இதுதானா ?என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்திய அரசு தமிழக ஊர்தியும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெறுவதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.