Categories
உலக செய்திகள்

“இந்த நாட்டுக்கு யாரும் போகாதீங்க”…. எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் நாட்டு அரசு….!!

துருக்கி நாட்டுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என தனது குடிமக்களுக்கு இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் நாட்டில் இஸ்லாமிய புரட்சி படையின்  ஹசன் சையத் கொடே மூத்த அதிகாரியாக இருந்தார். இவர் கர்னல் பதவி வகித்தவர். இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள்  ஹசனை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் ஈரான் நாட்டை ஆத்திரமடையச்  செய்துள்ளது. ஹசன் படுகொலைக்கு இஸ்ரேல் காரணம் என ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஹசன் மரணத்திற்கு பழிவாங்குவோம் என்று உறுதியும் எடுத்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத ஒழிப்பு வாரியம் தனது நாட்டு குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையளித்தது. இதில் துருக்கி நாட்டில் சுற்றுலா செல்லும் இஸ்ரேல் நாட்டினர் மீது ஈரான் தாக்ககூடும்.

மேலும் இஸ்ரேல் மக்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுத்தும் நாடாக துருக்கி உருவாகியுள்ளது. இதனால் மக்கள்  யாரும் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டை ஒட்டிய எல்லை பகுதியில் அமைந்த நாடுகளிலும் அதிக அச்சுறுத்தல்  காணப்படுகிறது. உலகம் முழுவதும் இஸ்ரேல் நாட்டு மக்களை குறிக்கோளாக கொண்டு ஈரான் தாக்க கூடிய சூழ்நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பு விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |