Categories
உலகசெய்திகள்

“இந்த நிபந்தனையை ஏற்க முடியாது”…. ஜி 7  நாடுகளின் அதிரடி அறிவிப்பு….!!

ரஷ்யா நாட்டின் நிபந்தனையை ஜி 7  நாடுகள் நிராகரித்துள்ளது.

ரஷ்யாவுடன் நட்பில் இல்லாத நாடுகள்  இயற்கை எரிவாயுவிற்கு பணம் செலுத்த வேண்டுமெனில் ரஷ்யா  நாணயமான ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்தார். மேலும் இது குறித்து  ஜெர்மனியின் எரிசக்தி துறை அமைச்சர் ராபர்ட் ஹேபெக் “பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி,  ஜப்பான்,  அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் கனடா போன்ற நாடுகளின்  அதிகாரிகளிடம்  ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்துள்ளனர்.

அதன் பின்  ஜி 7  நாடுகள் கூட்டத்தில் பங்கேற்று ரஷ்யாவில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவிற்கு ரூபிளில் பணம் செலுத்த முடியாது என்று ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரிக்கதுள்ளது” என கூறினார்.

Categories

Tech |