பிரிட்டனில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி சிறந்த பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் East Angila என்ற பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இஸ்ரேலின் தரவுகள் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி Fizer மற்றும் BioNTech என்ற தடுப்பூசிகள் இஸ்ரேலில் செலுத்தப்பட்டு 3 வாரங்கள் கடந்த நிலையில் தடுப்பூசிகள் 90% பயனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பிரிட்டனில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படாமல் 21 நாட்களுக்கு பின்பு எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்று தற்போது வரை அறியப்படவில்லை.
எனினும் அடுத்த ஒன்பது வாரங்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவதற்கு வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் மக்கள் கவனக் குறைவுடன் இருப்பதால் Fizer மற்றும் BioNTech என்ற தடுப்பூசி செலுத்திய முதல் எட்டு தினங்களில் கொரோனா தொற்று இருமடங்காக உயர்ந்துள்ளது என்று எச்சரித்துள்ளனர்.