Categories
தேசிய செய்திகள்

“இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது” …. Hospital முதல் வீடு வரை….. வைரலாக பரவும் பரிதாப புகைப்படம்….!!!!!

உயிரிழந்த மகனின் சடலத்தை விவசாயி தோலில் சுமந்து செல்லும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள திகுவபுத்தூர் கிராமத்தில் விவசாயியான செஞ்சய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3-ஆம்  வகுப்பு படிக்கும் பசவையா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை செஞ்சய்யா  தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பசவையாவை பாம்பு கடித்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செஞ்சய்யா தனது மகனை  மீட்டு  கே.வி.பி. புரம்  முதன்மை சுகாதாரம் மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சை  அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் சிவனின் உடலை ஏற்ற மறுத்து விட்டனர். இதனையடுத்து செஞ்சய்யா  ஆட்டோ உள்ளிட்ட வாகன டிரைவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் சிறுவனின் உடலை ஏற்றி செல்ல ஒத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றி செஞ்சய்யா தனது மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சுமந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் பார்ப்போரின் கண்களை கலங்க வைத்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |