Categories
உலக செய்திகள்

இந்த நிலை மாறுமா….? இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி…. கண்ணீர் வடிக்கும் மக்கள்….!!

75 ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். 
இலங்கை நாட்டில் கிட்டத்தட்ட 75 ஆண்டு  வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அன்னியச்செலாவணியில்லாமல் இறக்குமதி பெரும் பாதிப்புக்குள்ளானதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளதால் சாதாரண மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் எரிபொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் அல்லாடுகின்றனர்.
இனியும் பொறுத்துப் பயனில்லை என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபச்சேவுக்கு எதிராக மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் செயலக பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து 9-வது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இந்த ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என்று தொடர் போராட்டத்தில்  இலங்கை மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை அதிபர் கோத்தபய செயலக பகுதியில் நடந்து வருகிற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்குவதற்கும், அடித்து விரட்டுவதற்கும் ராணுவத்தினர் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை ராணுவம் நேற்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் இதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சக  அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர்.
இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலர் கமல் குணரத்னே  கூறுகையில் “அமைதியான போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படாது. ஆனால் வன்முறை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே போலீஸ் உதவி கோரினால் ராணுவம் களம் இறங்க தயங்காது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |