காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்க கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் பொன்னேரி கரையிலுள்ள மீன் சந்தையில் பொதுமக்கள் மீனை வாங்குவதற்காக கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஒன்றாக கூடியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கொரோனா வேகமாக பரவுவதற்கு வாய்ப்புள்ளது.