தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட உள்ளது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.