மதுரையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் தேனூர், சமயநல்லூர் உட்பட பல பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருடு போனது. இதனால் சமயநல்லூர் காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டரான சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் சமயநல்லூரிலிருக்கும் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த 2 வாலிபர்களை விசாரணை செய்தனர். அதில் அவர்கள் நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த அஜித் மற்றும் மலைச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள்தான் அப்பகுதியில் பைக்குகளை திருடி வந்ததும் கண்டறியப்பட்டது. இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.