தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது இந்தி திரை உலக பக்கம் ஒதுங்கி இருக்கிறார். அங்கு மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒன்று மதூர் பண்டார்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள பப்ளி பவுன்சர் என்ற படத்துக்கு விருது கிடைக்கும் என்று நம்புகிறார். இது குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், மதூர் பண்டாகர் இயக்கத்தில் நான் நடித்த பப்ளிக் பவுன்சர் இந்தி படத்துக்காக எனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். இந்தப் படத்தில் அரியானாவை சேர்ந்த பெண்ணாக நடித்தேன்.
முதல்முறையாக பெண் பவுன்சர் கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையில் இது சிறந்த படம். மதூர் பண்டாகர் படங்களில் நடித்த கதாநாயகிகளுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. எனவே எனக்கும் கூட இந்த படத்திற்கு விருது பெற ஆசை உள்ளது. விருது கிடைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். மேலும் வட இந்தியாவில் சில லேடி பவுன்சர்களின் வாழ்க்கை பார்த்து இந்த கதையை எழுதியாக இயக்குனர் தெரிவித்தார். இந்த படத்துக்கு எனக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.