பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டகர் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்த படத்தில் மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் போன்றோர் நடித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரசிகர்களிடம் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி வெங்கடேஸ்வரன் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66வது படம் உருவாக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் போன்றோர் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த பல யுகங்கள் இணையதளத்தில் கிளம்பியுள்ளது. ஆரம்பத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக செய்திகள் பரவியது. ஆனால் அவர் வேண்டவே வேண்டாம் என்று கதறினார் ரசிகர்கள். அதன்பின் கீர்த்தி சனோன், திஷா பதானி போன்ற பெயர்கள் தளபதி 66 ஹீரோயின் லிஸ்டில் அடிபட்டுள்ளது. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படத்தில் ஹீரோயினாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பயந்த மாதிரி நடந்து போச்சு என விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். தளபதி 66 குடும்ப பணியில் காதல் படமாக உருவாக உள்ளதாக குறிப்பிடத்தக்கதாகும்.