Categories
சினிமா

“இந்த படத்துல வாணி போஜன் நடிச்சிருக்காங்களா”.…? அப்படி ஒன்னும் தெரியலையே பா.…!!!!

மகான் என்ற படத்தை மலைபோல் நம்பிய வாணி போஜனுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகைகள் பலர் சினிமா பட வாய்ப்புகளில் நடித்து பெரும் ஹிட்டாகி வருகின்றன. அந்த வகையில் சீரியல் நடிகையான வாணி போஜன், தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலுக்கு குட்பை சொல்லிவருகிறார். மேலும் இவர் எப்படியாவது பெரிய பெரிய ஹீரோக்கள் படங்களில் கமிட்டாகி பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான மகான் திரைப்படத்தில் சில காட்சிகளில் விக்ரமிற்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் அமேசான் OTT  தளத்தில் படத்தை வெளியிட்டனர். மேலும் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் பெரிய கனவுகளுடன் இருந்த வாணிபோஜன்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் படத்தின் நீளம் காரணமாக இவர் நடித்த காட்சிகள் எதிர்பார்த்தபடி இடம்பெறாமல்  எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் பெரும் கவலையில் உள்ளார். நடிகர்கள் இருவருக்கு மட்டும்  முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது என கூறப்படுகிறது.  இதையடுத்து வாணிபோஜன் இப்படத்தின் வெற்றி மூலம் தனக்கு அடுத்தடுத்து நிறைய படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படம் இவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

Categories

Tech |