Categories
சினிமா

இந்த படத்தையெல்லாம் ரஜினி பாராட்டவில்லையே அது ஏன்…? ஓ இதுல இப்படி ஒரு சிக்கல் இருக்கோ….!!!

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம் நடிகர் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் படங்களை பார்த்து விட்டு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டி வருகிறார். இவரின் பாராட்டு அந்த படக்குழுவினரை ஊக்குவிப்பதாக  அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ஆனால் பாலிவுட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை மட்டும் ரஜினிகாந்த் ஏன் பாராட்டவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது.

அதாவது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படமும் சரி, ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படமும் சரி இரண்டு படங்களுமே சாதிப்பிரச்சனையை மையமாக கொண்டு உருவான படங்கள் தான். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களும் சர்ச்சைகளில் சிக்கியது.இருப்பினும் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வெற்றியே பெற்றன. இந்த படம் குறித்து ரஜினிகாந்த் ஏதாவது கருத்து தெரிவித்தால் அது சாதியப் பிரச்சினையை தனக்கு ஏற்படுத்தி விடுமோ என ரஜினிகாந்த் எண்ணியதனால் தான் இந்த படங்கள் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர் எந்த ஜாதியினருக்கும் ஆதரவாக இல்லை எனவும் நடுநிலைத்தன்மையாகவே செயல்பட விரும்புவதாகவும் அவருடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

Categories

Tech |