ரஜினியின் கபாலி படத்தை தயாரித்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இப்படம் வெளியானது. பலவிதமான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. தயாரிப்பாளர் தாணு இந்த படம் தனக்கு நல்ல லாபகரமான படம் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளில் தெரிவித்தார்.
இப்படம் திரைக்கு வந்து 4 வருடங்கள் ஆகிறது இன்றும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவில் தயாரிப்பாளர் தாணு கூறியதாவது: “அளவில்லா ஆனந்தம், சூப்பர்ஸ்டாரின் திரையுலகின் மணிமகுடம். வாதத்திற்கு உங்கள் புகழை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டுடன் எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு நன்றி ரஜினிகாந்த். என்றும் நம் மக்கள் ரசித்து கொண்டாடக்கூடிய #4yearsofindustryHitKabali திரைப்படத்தை தயாரிப்பதற்கு பெருமையடைகிறேன் “. இன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.