Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த படம் ஓடாது என்றார்கள்” நான் கேட்டேன் டிக்கெட் கிடைக்கவில்லை…. நடிகர் கார்த்தி நெகழ்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க கருணாஸ், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான விருமன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெற்றி அடைந்ததால் விருமன் படக்குழு ஒரு பார்ட்டி கொடுத்துள்ளனர். இந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா, கார்த்திக், பிரகாஷ்ராஜ், இயக்குனர் முத்தையா, நடிகை அதிதி சங்கர் உட்பட பலர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் நடிகர் கார்த்தி பேசியதாவது, வெற்றி என்பது அடிக்கடி கிடைக்காது என்பதால் அது கிடைக்கும் போதே கொண்டாடி விட வேண்டும் என்றார். இது ஒரு பெரிய குடும்பத்தின் வெற்றியாகும். இயக்குனர் முத்தையா ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் தான் கதை சொல்வார். ஒரு கூட்டு குடும்பத்தின் அழகே விட்டுக்கொடுத்து போவதில் தான் இருக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ வேண்டும் என்றால் கண்டிப்பாக சகிப்புத்தன்மை தேவை. நம்மை விட அவர்கள் தான் முக்கியம் என்று நாம் நினைக்க வேண்டும். இந்த படம் கிராமத்தில் ஓடும். நகரத்தில் சிரமம் என்று தான் சொன்னார்கள். ஆனால் நகரத்தில் நான் கேட்ட டிக்கெட் கிடைக்கவில்லை. மேலும் ஒவ்வொரு குடும்பத்தின் தியாகத்தால் மட்டுமே நாங்கள் வெளியில் வந்து வேலை செய்ய முடிகிறது என்றார்.

Categories

Tech |