Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த படம் தான் எல்லாத்தையும் கொடுத்தது”…. தனுஷ் சாருக்கு நன்றி…. தெரிவித்த விக்னேஷ் சிவன்….!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இந்த திரைப்படம் வெளியாகி 7 வருடங்களான நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார். நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளாகின்றது என்றும் சொல்லலாம். நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளனர்.

இந்நிலையில் ரொமான்டிக் காமெடி வகை படமாக வெளியான இந்த திரைப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். “போடா போடி” திரைப்படத்தின் தோல்வியிலிருந்து விக்னேஷ் சிவனுக்கும் சரி, தொடர் தோல்விகளிலிருந்து விஜய் சேதுபதிக்கு தேவைப்படும் வெற்றியை நானும் ரௌடி தான் திரைப்படம் அளித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகள் நோக்கி இழுத்து வந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அது வரை அதிரடி பாடல்களை கொடுத்து வந்த அனிருத் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்காக மெலடி இசையை வாரி வழங்கி காதலர்களுக்கு பெரிதும் உதவியுள்ளார்.

https://www.instagram.com/reel/Cj-Gm0UrEiu/?utm_source=ig_web_copy_link

இதனை அடுத்து மிகவும் உணர்வு பூர்வமாக செண்டிமெண்ட்கள் நிறைந்த கதையை 2 மணி நேரம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக கையாண்டு வெற்றி பெற்று இருக்கின்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்நிலையில் நானும் ரவுடிதான் வெளியாகி ஏழு வருடங்களான நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நயன்தாரா உள்பட நடிகர்களுக்கு காட்சி ஒன்றை விளக்கிக் கொண்டிருக்கின்றார் விக்னேஷ் சிவன். அவரது பதிவில் 7 ஆண்டுகள் இன்ப அனுபவம் இந்த படம் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இதற்காக எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன் தனுஷ் சார்” எஎன்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |