Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த பணம் யாருடையது?…. டிக்கெட் பரிசோதகரின் செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்து நிலையத்தில் கிடைத்த 1  லட்ச ரூபாய் பணம்  குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கக்கன் நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சண்முகசுந்தரம் புதிய பேருந்து நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் பேருந்து நிற்கும் இடத்தில் பை ஒன்று கிடந்துள்ளது.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த சண்முகசுந்தரம் அந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில்  ஒரு லட்ச ரூபாய் பணம்  இருந்துள்ளது. இதனையடுத்து சண்முகசுந்தரம் அந்த பணத்தை மேலப்பாளையம் காவல்துறையினரிடம்   ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் இந்த பணம் யாருடையது? எப்படி தொலைந்தது  என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |