Categories
மாநில செய்திகள்

இந்த பள்ளியின் +1, +2 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் +1, +2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 30க்கும் குறைவான, ஊரகப் பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் 600க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலுவதாக செய்தி வெளியான நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

Categories

Tech |