Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு சேர… நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம்… மாவட்ட முன்னாள் படைவீரர் தகவல்..!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வரதராஜன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ராஷ்டிரிய இந்திய ராணுவ பள்ளி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பில் ஜனவரி 2022-ல் சேர்வதற்கு வருகின்ற ஜூன் மாதம் 5-ஆம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்விற்கு 13 வயது அடைந்தவராகவும், 1.1.2022 அன்று 11 1/2 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். வருகின்ற 15-ஆம் தேதி இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த அறிய வாய்ப்பினை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி பயன் அடையலாம் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |