இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையில் இந்தியாவில் பொதுவாகவும், பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் என்ன என்பதை ஆய்வு மூலம் NordPass என்ற நிறுவனம் கண்டறிந்து சொல்லியுள்ளது. பாஸ்வேர்டுகளை பயனர்கள் நிர்வகித்துக் கொள்வதற்கான சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது.
அதன்படி, “password” என்ற சொல்லை தான் இந்தியாவில் பொதுவாக பலரும் பயன்படுத்துகின்ற கடவுச்சொல் என தெரியவந்துள்ளது. அதே போல iloveyou, krishna, sairam மற்றும் omsaira மாதிரியான பாஸ்வேர்டுகளையும் இந்தியர்கள் பயன்படுத்தி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. உலக அளவில் ‘12345’ மற்றும் qwerty கீஸ்களின் வேரியேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்ற நிலையில் இந்தியா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. abc123, india123, qwerty மாதிரியானவை இந்திய அளவில் பயன்படுத்தப்படும் டாப் 10 பாஸ்வேர்டுகளில் உள்ளன.