சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் வயிற்றுவலி பிரச்சனையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தில் தட்டான்குளம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாய கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடும் வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.