காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனையால் மோதல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில் சீனா தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங்கி கூறியதாவது. இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானதாகவும், தெளிவானதாகவும் உள்ளது. ஏனென்றால் இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்றில் இருந்து எஞ்சியிருக்கும் பிரச்சனை.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் தொடர்புடைய இரு தரப்பு ஒப்பந்தங்களின்படி அமைதியான வழியில் சரியான முடிவு எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.