Categories
உலக செய்திகள்

“இந்த பிரச்சனை முடிவுக்கு வராது”…. அமெரிக்க மருத்துவர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

ஒமிக்ரானின் துணை வைரஸான BA.2 அமெரிக்காவில் காட்டுத்தீயைப் போல வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க மருத்துவரான Dr. Anthony Fauci கொரோனா முற்றிலும் காணாமல் போகப் போவதுமில்லை, ஒழிய போவதுமில்லை என்று கூறியுள்ளார். மேலும் விழாக்களுக்கோ, விருந்து நிகழ்ச்சிகளுக்கோ செல்பவர்கள் தாங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க போகிறோம் என்பதை தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் அண்மையில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதனால் பலருக்கும் கொரோனா தொற்று பரவியது. எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் தாங்கள் எளிதில் பாதிக்கக்கூடிய ஒருவருடன் வாழ்கிறோமா, தங்கள் வயது உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ளுதல் நல்லது என்று கூறியுள்ளார் Dr. Anthony Fauci. சமுதாயத்தில் சிறிதளவு கொரோனா வைரஸுடன் தான் நாம் எப்போதுமே வாழ போகிறோம் என்று கூறியுள்ள Dr. Anthony Fauci, அனைவரும் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |