Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இந்த பிறந்த நாளை என்னால் மறக்க முடியாது”… சக கொரோனா நோயாளிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய நபர்…!!

பட்டுக்கோட்டைய சேர்ந்த நபர் ஒருவர் சக கொரோனா நோயாளிகளுடன் தனது பிறந்தநளை விதி முறைகளை கடைப்பிடித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 6 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. அதன் அடிப்படையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்காவில் இதுவரை சுமார் 300க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உள்ளது. இதனிடையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெருமாள்கோயில் புதுரோட்டில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய பிறந்தநாளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவுறுத்தலின் மூலம், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நேயாளிகள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது பற்றி அந்த இளைஞர் கூறுகையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கி உற்சாகமூட்டும் வகையில் அமைந்த இந்தப் பிறந்தநாள் என் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாத நாள். கொரோனாவை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. சுகாதாரமான முறையில் நல்ல உணவு முறைகளை எடுத்துக்கொண்டு இந்தக் கொரோனாவை வெற்றிகொள்வோம்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Categories

Tech |