Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த புதுவகையான ரெசிபிய செய்து… காதலர்கள் தினத்தை கொண்டாடுங்க..!!

வெங்காயம் சிக்கன் ஃப்ரை செய்ய  தேவையான பொருட்கள்:

சிக்கன்                              – 1/2 கிலோ

ஊற வைக்க:

மிளகாய்த்தூள்             – 1 தேக்கரண்டி
மல்லி தூள்                     – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்       – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                  – 1 தேக்கரண்டி
உப்பு                                   – சிறுது

மசாலாவிற்கு:

எண்ணெய்                      – 3 தேக்கரண்டி
சீரகம்                                 – 1 தேக்கரண்டி
வெங்காயம்                    – 4
பச்சை மிளகாய்            – 3
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 1/2 கப்
எலுமிச்சை சாறு          – 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் சிக்கனை ஒரு பாத்திரத்தை எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டியபின், தண்ணீரால் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வெங்காயம்,பச்சை மிளகாயை, சிறியதாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பிறகு சுத்தம் செய்த சிக்கனில், மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், ருசிக்கேற்ப உப்பு போட்டு  சிக்கனில் முழுவதும் படும்படி நன்கு விரவியபின் அப்படியே சில மணிநேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் அகலமான வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிறிது சீரகம், வெட்டி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கியபின், அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து  பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்கு பொன் நிறமாக வதக்கவும்.

மேலும் பொன்னிறமாக வதக்கிய கலவையுடன், விரவி வைத்த சிக்கனை துண்டுகளை போட்டு  கரண்டியால்  நன்கு வதக்கியபின்,  மூடி வைத்து சில நிமிடம் சிக்கன் நன்கு வேக வைக்கவும்.

இறுதியில் சிக்கன் நன்கு வெந்து, அதிலுள்ள தண்ணீர் வற்றி எண்ணெய் திரண்டு வரும் வரை வதக்கியபின், நறுக்கிய கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து கரண்டியால் நன்கு பிரட்டி விட்டபின்இறக்கி வைத்து பரிமாறினால் காரசாரமான ருசியில், சுவையான வெங்காயம் சிக்கன் ஃப்ரை ரெடி.

Categories

Tech |