Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த புலாவை செய்தால்…உடனே காலி ஆகிரும்…!!

கிரீன் பீஸ் புலாவ் செய்யத் தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி                                  -1 கப்
பச்சை பட்டாணி                               -அரை கப்
கேரட் துண்டுகள்                             , – அரை கப் நறுக்கியது
பச்சை மிளகாய்                                 – 2
இஞ்சி                                                     – சிறு துண்டு
பூண்டு                                                     – 6 பல்
பெரிய வெங்காயம்                          – 1
பட்டை, கிராம்பு தூள்                       – அரை டீஸ்பூன்
எண்ணெய்                                           – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு                                                         – தேவையான அளவு

செய்முறை:

பாஸ்மதி அரிசியை எடுத்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதுகளை நன்கு அரைத்து மற்றும் வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்புத்தூள் போட்டு தாளித்து அதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.

அதனை தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய், நறுக்கிய கேரட், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை நன்கு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

அதனுடன் அரிசி சேர்த்து நன்கு கிளறியபின் அதனை அப்படியே குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப்) மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

குக்கரில் விசில் அமந்ததும்  திறந்து நன்கு கிளறிவிட்டால் சுவையான, ருசியான கிரீன் பீஸ் புலாவ்  தயார். அதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி குருமா அல்லது வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

Categories

Tech |