Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த பூசாரியை உடனடியாக மாற்றனும்…. பொதுமக்கள் அளித்த புகார்…. கோவிலின் முன்பு ஆர்ப்பாட்டம்….!!

பத்திரகாளியம்மன் பூசாரியை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோவிலின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள மேட்டுக்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதால் தற்போது தற்காலிகமாக அவருடைய மருமகன் அய்யனார் என்பவர் கோவிலில் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அய்யனாரிடம் கோவிலில் காணிக்கையாக வந்த தங்க நகைகள், வெள்ளி காசு, காணிக்கை பணம் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டுதற்கு அய்யனார் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தற்போது உள்ள பூசாரி அய்யானாரை மாற்றி வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராசிபுரம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன் பிறகே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |