அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 2500 ஹெக்டேரில் முன்பட்ட சொர்ணவாரி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்களை கருப்பு நாவாய் என்ற பூச்சி தாக்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வேளாண்மை அறிவியல் நிலைய விதை தொழில் நுட்ப உதவி பேராசிரியர் நடராஜன், மேலாண்மை உதவி இயக்குனர் பூவராகவன், மேலாண்மை அலுவலர் சசிகுமார், உதவி மேலாண்மை அலுவலர் செந்தில் ஆகியோர் கொண்ட குழு பயிர்களை பார்வையிட்டனர்.
அதன் பின்னர் அவர்கள் கூறியதாவது. இந்த கருப்பு நாவாய் பூச்சிகளை ஆரம்ப நிலையில் அழிக்க 1 லிட்டர் தண்ணீருடன் 50 மி.லி வேப்பங்கொட்டை சாறை கலந்து தெளிக்கலாம். மேலும் வயலில் உள்ள தண்ணீரை வடிகட்டிய பிறகு மருந்துகளை தெளிக்க வேண்டும் என்றும், மாலை நேரங்களில் விளக்கு பொறி வைத்தும் இந்த கருப்பு நாவாய் பூச்சிகளை அளிக்கலாம் என கூறியுள்ளனர்.