அலுமினியத்தால் பெட்டியில் நாம் உணவு வைப்பதால் ஏற்படும் அபாயம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
முன்னொரு காலத்தில் எந்த உணவகத்திற்கு சென்றாலும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள் .தற்போது அதை மாற்றி பேப்பர் இலையில் உணவு பரிமாறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மேலும் தற்போது உள்ள ஹோட்டல்களில் கூட ஒரு சில உணவகங்களில் தான் இலையில் சாப்பாடு பரிமாறுகிறார்கள். அது தவிர சிலர் பார்சல் வாங்கி செல்லும்போது அலுமினியத்தால் பெட்டியில் சுடச்சுட இருக்கும் உணவை அதில் போடுகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று.
இதில் உள்ள மெல்லிய பல்வகை உலோகம் நம் உணவில் கலந்து ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதில் வைக்கப்பட்டுள்ள உணவுகளை நாம் சாப்பிடும் போது நமக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அலுமினியத் தட்டில் உள்ள ரசாயனம் நமது எலும்புகளை பலவீனப்படுத்தும்.
நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும். இதில் உணவு உட்கொண்டால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளது. இது மட்டுமில்லாமல் அலுமினிய தகடில் சூடான உணவுகளை வைத்து பேக் செய்யும் போது அதிலுள்ள கூறுகள் உருக்கி உணவில் படுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்குக் வழிவகுக்கிறது.