இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரித்தபின் பல்வேறு வங்கிகள் தங்களது கடன்களை விலையுயர்ந்ததாக மாற்றியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியும் அதன் கடன்களை விலை உயர்த்தி இருக்கிறது. அதன்பின் பல்வேறு வங்கிகளும் கடன்களை விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பணம்வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென ரிசர்வ் வங்கியானது கடந்த வெள்ளிக்கிழமை ரெப்போ விகிதத்தை 0.50 % அதிகரித்தது. ஆனால் அதன்பின் பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளது.
இந்த வருடம் மே மாதத்திலிருந்து ரிசர்வ்வங்கி ரெப்போ விகிதத்தை 4 முறை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி 4வது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தி 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிகரிப்புக்கு பின், ரெப்போ விகிதமானது 5.90 சதவீதத்தை எட்டி இருக்கிறது. ரெப்போரேட் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கக்கூடிய கடனுக்கான விகிதம் ஆகும்.
# SBI இணையதளத்தின் அடிப்படையில் எக்ஸ்டெர்னல் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட் மற்றும் ரெப்போ ரேட் குறித்த கடன் வட்டிவிகிதம் ஆர்.எல்.எல்.ஆர் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உயர்வுக்குப்பின் ஈபிஎல்ஆர் 8.55 சதவீதம் ஆகவும், ஆர்எல்எல்ஆர் 8.15 ஆகவும் இருக்கிறது. புது கட்டணங்கள் அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
# பேங்க் ஆப் இந்தியா RBLRஐ 8.75 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
# ICICI வங்கி, அதன் ஈபிஎல் ஆரை உயர்த்தி 9.60சதவீதம் ஆக அதிகரித்து இருக்கிறது. EBLR என்பது வங்கிகள் கடன் வழங்க அனுமதிக்காத வட்டி விகிதம் ஆகும். கடன் விகிதம் அதிகரிப்பால் EBLR (அல்லது) RLLRல் கடன் வாங்கியவர்களின் EMI அதிகரிக்கும்
# HDFC வங்கி வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50 % உயர்த்தியுள்ளது. இந்த நிதிநிறுவனம் சென்ற 5 மாதங்களில் 7-வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது.