ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை பல்வேறு வங்கிகள் மாற்றி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
7 நாள் முதல் 84 மாதம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. அதில் குறைந்தபட்சமாக 3 சதவீதம் வட்டியும், அதிகபட்சமாக 6.75% வட்டியும் ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி வழங்குகின்றது.
புதிய வட்டி விகிதம்:
7 – 45 நாள் : 3%
46 – 90 நாள் : 3.25%
91 – 180 நாள் : 3.50%
181 – 364 நாள் : 5.15%
12 மாதம் – 15 மாதம் : 6%
15 மாதம் 1 நாள் – 18 மாதம் : 6%
18 மாதம் 1 நாள் – 21 மாதம் : 6.50%
21 மாதம் 1 நாள் – 24 மாதம் : 6.50%
24 மாதம் 1 நாள் – 30 மாதம் : 6.50%
30 மாதம் 1 நாள் – 36 மாதம் : 6.50%
36 மாதம் 1 நாள் – 42 மாதம் : 6.75%
42 மாதம் 1 நாள் – 48 மாதம் : 6.75%
48 மாதம் 1 நாள் – 59 மாதம் : 6.75%
59 மாதம் 1 நாள் – 66 மாதம் : 6.75%
66 மாதம் 1 நாள் – 84 மாதம் : 5.50%