Categories
உலகசெய்திகள்

இந்த பேச்சு வார்த்தை அதிகாரப்பூர்வமானதே…. இந்தியா சீனா எல்லை பிரச்சனை…. சீனாவின் கருத்து…!!!!

சீன எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள  பேச்சுவார்த்தை  மிகவும் ஆக்கப்பூர்வமானது என சீனா கருத்து தெரிவித்துள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ செய்தி தொடர்பாளர் உ கியான் நேற்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பிலிருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது என இந்தோ, பசுபிக் விவகாரங்களுக்கு அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர்  கூறியிருக்கிறாரே ? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் பதிலளிக்கையில், எல்லை பிரச்சனையை ஆலோசனை மூலம் சரியாக கையாளுவது என்று  சீனாவும் இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ள மூன்றாம் தரப்பினர் இடையே தலையீட்டை உறுதியாக எதிர்க்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 11ஆம் தேதி இருதரப்பினரிடையே நடத்திய 15வது சுற்று பேச்சுவார்த்தை நேர்மையாகவும் அதிகாரப் பூர்வமாகவும் அமைந்தது. எஞ்சியுள்ள பிரச்சினைகளில் தீர்வு காண்பது அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என இரு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர் என கூறியுள்ளார்.

Categories

Tech |