தனுஷை பார்த்து ஹீரோயின் அம்மா அதிர்ச்சி அடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்தின் அனுபவம் குறித்து சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, அந்த படத்தில் தனுஷின் கெட்டப் வித்தியாசமாக இருந்ததால் அவரைப் பார்த்ததும் இவரா ஹீரோ என என் அம்மா அதிர்ச்சி அடைந்தார்.
உன்னுடைய முதல் படத்தில் இந்தப் பையன் ஹீரோவா? யோசித்துதான் செய்கிறாயா? என்றெல்லாம் என்னுடைய அம்மா கேட்டார். அம்மா அமைதியாக இருங்கள் அது ஹீரோவின் கெட்டப் அப்படி. சும்மா ஏதாவது சொல்லாதீங்க என்று நான் கூறினேன். மேலும் சூட்டிங்கின்போது தனுஷிடம் ஒருவர் ஹீரோ யார் என கேட்க அதற்கு தனுஷ் இரண்டாவது ஹீரோவை கை காட்டியுள்ளார். சூட்டில் உள்ள ஒருவர் அவர் இல்லை ஹீரோ இவர்தான் என கூறியதற்கு அவரின் உருவத்தை கேலி செய்து சிரித்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த தனுஷ் காருக்குள் சென்று அழுந்தது குறிப்பிடத்தக்கது.