Categories
மாநில செய்திகள்

இந்த பொருட்களும் விலை உயர்வு?… போச்சு அவ்வளவுதான்… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சிலிண்டர் பெட்ரோல் விலையை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தி உள்ளதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்து தொழில் தடுமாறும் நிலையில் உள்ளது. அதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.

தற்போது வேறு வழியின்றி கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தி உள்ளோம். அதனால் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் அன்றாட பொருள்களின் விலை உயர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ம் இதனையடுத்து சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலையை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயத்தில் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி சரக்கு வாகனங்களின் வாடகையை கடுமையாக உயர்த்தப் போவதாக லாரி அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதனால் மளிகை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்படும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |