போஜ்புரி திரை உலகின் நடிகரும், பாஜக எம்பி-யும் ஆன மனோஜ் திவாரியின்(51) மனைவி சுரபி திவாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் சென்ற 2 தினங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் தகவலை மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது “இந்த மகிழ்ச்சி செய்தியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை.
அதை உணர மட்டுமே முடியும்” என வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2020ம் வருடம் ஏப்ரலில் திருமணம் நடைபெற்றது. அதன்பின் இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். அதுபோல் கடந்த 1999-ம் ஆண்டு மனோஜ் திவாரி, ராணிதிவாரி என்பவரை திருமணம் செய்ததில், ரீத்தி திவாரி என்ற மகள் இருக்கிறார். ஆனால் 2012-ம் வருடம் அந்த தம்பதியினர் பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.