ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த சிறுமி தனக்கு கிடைத்த பணம் உதவியின் மூலம் தன்னைப் போன்ற பல சிறுமிகளுக்கு உதவியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெக்கா புல்லஸ் (11) என்ற சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இந்த சிறுமிக்கு அத்லடிக்ஸ் மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் சிறுமிக்கு அவர்களுடைய பெற்றோர்களால் ஸ்போர்ட்ஸ் ஷூ கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக சிறுமிக்கு அத்லடிக்ஸ் ட்ரெய்னிங் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுமி தன்னுடைய பள்ளியில் நடைபெற்ற அத்லடிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்று இன்டர்நேஷனல் அளவில் நடைபெறும் பள்ளிகளுக்கான அத்லடிக்ஸ் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு சிறுமிக்கு அத்லட்டிக்ஸ் ஷு இல்லாத காரணத்தினால் ஒரு டேப்பை காலில் சுற்றிக் கொண்டு அதில் Nick என்ற ப்ராண்ட் பெயரை எழுதினார். அதன்பிறகு நடைபெற்ற போட்டியில் சிறுமி கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதில் வெற்றி பெற்றதால் சிறுமி உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். இதை தெரிந்து கொண்ட Nick நிறுவனம் சிறுமிக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிக் கொடுத்து பண உதவியும் செய்துள்ளது. மேலும் சிறுமி தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் தன்னைப் போன்று வறுமையில் வாடிய சில சிறுமிகளுக்கு ஸ்போர்ட்ஸ் கிட் வாங்கி கொடுத்துள்ளார்.