Categories
மாநில செய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…‌ யாசகம் பெற்ற பணம்…. நிவாரணமாக கொடுத்த முதியவர்….!!!!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிநகர் பகுதியைச் சேர்ந்த சன்யாசி பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் கோவிலாக சென்று பிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வங்கி கிளை மூலமாக இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்து அதன் ரசீது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கிய அவரிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

இதுபற்றி போல் பாண்டி பேசும் போது எனக்கு இரண்டு மகள் ஒரு மகன் இருக்கின்றார்கள். மகள் மற்றும் மகன் திருமணமாகி நல்ல நிலையில் இருக்கின்றனர். மேலும் மனைவி இறந்து விட்டதால் பிள்ளைகள் என்னை கவனிக்கவில்லை. இதனால் நான் சன்னியாசியாகி பிச்சை எடுக்க தொடங்கி விட்டேன். பிச்சை எடுத்த பணத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சிசிடிவி, ஆர் ஓ வாட்டர், பென்ச் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்திருக்கின்றேன். மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் பிச்சை எடுக்கும் பணத்தை பத்தாயிரமாக சேர்த்து அந்த மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து விடுவேன் என தெரிவித்துள்ளார். வேலூர் வள்ளிமலை முருகன் கோவிலில் பிச்சை எடுத்த ரூபாய் பத்தாயிரம் பணத்தை  இலங்கை தமிழர்களுக்கும், கொரோனா நிதிக்கும் வழங்கியுள்ளார் பூல் பாண்டி. கடந்த 2010 ஆம் வருடம் முதல் பிச்சை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |