Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மனசு தான் சார் கடவுள்…. G-Pay யில் தவறுதலாக வந்த ரூ.75 ஆயிரம் பணம்…. உரியவரிடம் ஒப்படைத்த நபர்….. நெகிழ்ச்சி….!!!!

வேலூரில் உணவக உரிமையாளருக்கு கூகுள்பே-ல் தவறுதலாக அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய்,சிங்கராசு. அவர்கள் 2 பேரும் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நவீன் என்பவரின் உணவகத்திற்க்கு சாப்பிட சென்றுள்ளனர். உணவிற்கான பணத்தை கூகுள்பே-ல் அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சிங்கராசு அவரது உறவினருக்கு கூகுள் பேயில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அனுப்பியுள்ளார்.

இதனிடையே உறவினரின் வங்கி கணக்கில் பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர் கூகுள்பேயை ஆராய்ந்த போது  ,75 ஆயிரம் ரூபாய் பணத்தை தவறுதலாக உணவக உரிமையாளருக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முன்னிலையில் 75 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த உணவக உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |