மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் காலனி வாங்கி கொடுத்த இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டிவருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைபள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் 6 மாணவர்கள் வெறும் கால்களுடன் நடந்து சென்றுள்ளனர்.
இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அந்த 6 மாணவர்களுக்கும் தனது சொந்த செலவில் காலணிகளை வாங்கி கொடுத்து மாணவர்களை நன்றாக படிக்கும் படி வாழ்த்தியுள்ளார். இவரது இந்த நல்ல மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்.