உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேவாரியா என்ற பகுதியில் உள்ள கனக் ஸ்வீட்ஸ் என்ற பேக்கரி கடை உள்ளது. அங்கு தாய் தந்தை இல்லாத 14 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு கேக் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் உரிமையாளர், தனது அறிவிப்பில், இலவசம்.. இலவசம்.. தாய், தந்தை இல்லாத 14 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக்குகள் இங்கு இலவசமாக தரப்படும் என எழுதி அறிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை ஐஏஎஸ் அதிகாரி அவனிஸ் சரன் ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டியுள்ளார். கடையின் உரிமையாளருக்கு அன்பும் மரியாதையும் என பாராட்டியுள்ளார். இந்த பதிவுக்கு இதுவரை 25,000க்கும் மேற்பட்ட லைக்குகள், 2000க்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகள் கிடைத்துள்ளன.
Love and Respect for the Shop Owner.❤️ pic.twitter.com/aNcSfttPrV
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) August 12, 2022