தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆழ்ங்கிணற்றை சேர்ந்த பாண்டியன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள், ஒரு மகன் இருக்கின்றார்கள். மும்பையில் தேய்ப்பு கடை நடத்தி அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 வருடம் பணி செய்து குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அதன் பின் 2010 ஆம் வருடம் தமிழ்நாடு வந்த இவரை குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிச்சை எடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வந்துள்ளார்.
அரசு பள்ளிகளுக்கான, கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கான நிதி என நிவாரண நிதி வழங்கி வந்துள்ளார். இந்த சூழலில் விருதுநகர் மாவட்டம் வருகை தந்த சமூக சேவகர் இருக்கன்குடி கோவிலில் திருவிழாவிற்கு வந்து தங்கி கோவில், வீடு, கடைகளில் பிச்சை எடுத்து ரூபாய் பத்தாயிரம் சேமித்து மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாதரெட்டியிடம் இலங்கை தமிழர்களுக்கான முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இவர் இதே போன்று இதுவரை 50 லட்சத்து 60 ஆயிரம் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.