நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சை அனைவருக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப் படுத்தும் விதமாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நாடாளுமன்ற குழு திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புற்றுநோய் “அறிவிக்கையில் இடம்பெற்ற” நோயாக குறிப்பிட வேண்டும் என பரிந்துரைத்தது. அப்போதுதான் தேசிய அளவில் புற்று நோயின் தாக்கத்தை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும் என்று கேட்டுக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து புற்றுநோய் “அறிவிக்கையில் இடம்பெற்ற” நோயாக குறிப்பிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சட்டப்படி அரசு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல், புற்று நோயின் தாக்கத்தை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவும். மேலும் புற்றுநோய் மருந்துகளுக்கான விலையை குறைப்பதிலும், ஜிஎஸ்டியிலிருந்து அதற்கு விலக்கு அளித்து கதிர்வீச்சு சிகிச்சைக்கான கட்டணத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகலிடம் வலியுறுத்தியது.