கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு கட்டணம் கிடையாது என்று சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பட்டியலை பள்ளிகள் சமர்ப்பிக்கும் போது, பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories