செவிலியர் பணிக்காக இங்கிலாந்து நாட்டில் தொழில் முறை ஆங்கில தேர்வு கட்டாயமாக உள்ளது. எனவே இந்த தேர்வு எழுதுவதற்காக தமிழக செவிலியர் பயிற்சி கல்லூரிகளின் இளநிலை இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களில் 481 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முழு பயிற்சிக்கான கட்டணத்தையும் அரசை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் பயிற்சி பெரும் மாணவர்களோடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது தேர்வு கட்டணத்தை செலுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இது முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சல்லப்பட்டு தொழில் முறை ஆங்கில தேர்வு எழுத உள்ள மாணவர்களின் தேர்வு கட்டண சுமையை குறைக்கும் விதமாக ஒரு செவிலிய மாணவருக்கு 7500 வீதம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.