தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாதம் நான்காம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது