Categories
மாநில செய்திகள்

இந்த மாதிரி ஆளை உயிரோடு விடக்கூடாது…! நான் அப்படியே தலை குனிச்சுட்டேன்… திருமா சொன்ன அந்த விஷயம் …!!

அரக்கோணம் கொலை சம்பவத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொல்லப்பட்டவர் எந்த கட்சிக்காரன் என்பது அல்ல, அவர் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த குடிமகன். எங்கள் சாதியாக இருந்தால் தான் போராடுவோம், எங்கள் மொழியை பேசுபவனாக இருந்தால்தான் போராடுவோம், எங்கள் மதத்தை சார்ந்தவராக இருந்தால் தான் போராடுவோம், என்பது மாதிரி ஒரு அறியாமையை உருவாக்கவில்லை.

உலகத்தில் எங்கு பாதிப்பு நேர்ந்தாலும், மனிதகுலத்திற்கு பாதிப்பு நேர்ந்தாலும் எவன் கொந்தளித்து எழுகிறானோ அவன்தான் உண்மையான புரட்சியாளன், அதனால் தான் சேகுவாரா கொண்டாடப்படுகின்றான், அதனால் தான் மேதகு பிரபாகரன் கொண்டாடப்படுகின்றான். 2002 யாழ்ப்பாணத்திற்கு போன போது என்னை தனியாக சந்தித்து ,ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார் அண்ணன் பிரபாகரன் அவர்கள்.

வாயில் மலத்தை திணித்தவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா என்று கேட்டார். நான் தலை குனிந்து விட்டேன், இந்த மாதிரியான ஆட்களை உயிரோடு வைத்திருப்பது தவறு… எப்படி இதை எல்லாம் அங்கே இருக்கக்கூடிய கட்சிகள், அரசியல் கட்சிகள் ஜீரணித்துக் கொண்டு இருக்கின்றன. எப்படி அவர்கள் அரசியல் செய்கிறார்கள் ? இதனால் நான் மூன்று நாள் தூங்கவில்லை.

அவர் வெளிப்படையாக மனம் திறந்து சொன்னது. இந்த ஜனநாயக காலத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் வாயில் மலத்தைத் திணிக்கிறான் என்றால்… எப்படி இதையெல்லாம் சகித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அருகிலிருந்த அந்த ஆவேசம் உண்மையான புரட்சியாளர்கான அடையாளம் அது தான்.

அங்கு யாரோ தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட தலித் என்றெல்லாம் நினைக்கவில்லை.இங்கு இருக்கின்ற ஏமாற்றும் பித்தர்களை களைப் போல….  தலித் கொல்லப்பட்டான் என்றால், அது ஒரு பிரச்சினையே கிடையாது. அப்படியே கண்டும் காணாமல் போவார்கள், மரத்துப் போன ஜென்மம். மனித குலத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பை கண்டு, கொதித்து எழகூடியவன் தான் உண்மையான மனிதன் உணர்வு என்று நாம் நம்புவோம்.

அவன் எஸ்சி என்பதற்காக கேட்க வேண்டாம்,   அவன் விசிக என்பதற்காக கேட்க வேண்டாம். ஒரு கொடூரம் நம் கண் முன்னாடி அரங்கேறும் பொழுது கேட்க வேண்டாமா ? நாடி நரம்பு பிடிக்க வேண்டாமா ? ரத்தம் கொதிக்க வேண்டாமா ? பிரபாகரனிடம் அதை பார்க்க முடிந்தது.

சேகுவேரா தான்  பிறந்த நாட்டில் உள்ள மக்களுக்காகவா  போராடினான். தன் சொந்த இனத்திற்காக மட்டுமா போராடினான். ஒடுக்கப்பட்டு இருக்கின்ற, சுரண்டப்பட்டு இருக்கின்ற அத்தனை பேர் விடுதலைக்காகவும் அவர் இரு சக்கர வண்டியில் பயணம் செய்தவன்.  புரட்சியை முன்னெடுத்தவன், புரட்சியே முடித்துவிட்டு அடுத்தடுத்து களத்தை நோக்கி நகர்ந்து கொண்டான் என தெரிவித்தார்.

Categories

Tech |