Categories
இந்திய சினிமா சினிமா

இந்த மாதிரி படம்…. அந்த மாதிரி படம்…. வேறுபாடு இல்லை எதிலும் நடிப்பேன் – சமந்தா

பிரபல நடிகை சமந்தா எல்லாவித கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவிடம் ‘நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படம் அல்லது வர்த்தக படம் இவற்றில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள்’ என கேட்டபோது அவர் கூறிய பதிலாவது “நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும், வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறு மாதிரி இருக்கும் என பிரித்து பார்த்து நான் கணக்கு போடுவது இல்லை. நான் சினிமா துறைக்கு எதிர்பாராமல் வந்த நடிகை  அதனுடன் அதிர்ஷ்டமும் சேர்ந்ததால் சிறந்த நடிகை என பெயர் பெற்றேன்.

என்னைவிட திறமையானவர்கள், அழகானவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்துள்ளேன். எதிர்பாராமல் இத்தொழிலுக்கு வந்தாலும் தற்போது சினிமாதான் என் வாழ்க்கை என்று சொல்லும் அளவிற்கு நடிப்பின்   மீது காதலை வளர்த்து கொண்டேன். எனவே அந்த மாதிரி படம், இந்த மாதிரி படம் என வேறுபடுத்திப் பார்க்காமல் எல்லாவித கதைகளிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று சமந்தா பதிலளித்துள்ளார்.

Categories

Tech |