கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் மோல்னுபிராவிர் என்ற மாத்திரையை உருவாக்கியுள்ளது. இதன் விலை 35 ரூபாய். கொரோனா நோயாளிகளுக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை 1,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தியாவில் இதனை விற்பனை செய்வதற்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.
இந்த மாத்திரையினால் அறியப்படுகின்ற நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாக கூறி இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறுகையில், நாங்கள் இந்த மாத்திரை பற்றி விரிவாக ஆலோசித்தோம். அதில் இறுதி முடிவு, இந்த மாத்திரையின் பயன் பாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ஆபத்துகள் இருக்கின்றன. இந்த மாத்திரைக்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மூத்த குடிமகன்களுக்கு குறிப்பிடும்படியாக இணை நோய்கள் கொண்டவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் இந்த மருந்துகளை பருவ வயதினருக்கு கொடுக்கக்கூடாது என்றும் மருத்துவர் என்.கே.அரோரா கூறியுள்ளார். வரும் நாட்களில் கொரோனா எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும். உண்மையில் அது நடந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முறையான அணுகுமுறை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய காரணிகளாக உள்ளன. ஊரடங்கு போன்ற நிர்வாக நடவடிக்கைகளும் இதற்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.