கருத்தடை மாத்திரைகளை பெண்கள் உட்கொள்வதால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க 72 மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் வகையில் ஐ-பில் போன்ற உடனடி கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 24 மணி நேரத்திற்குள் எடுத்தால் 90 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது.
ஆனால் பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் பால்வினை நோய்களை இது தடுக்காது.இது மாதவிடாய் சுழற்சி பாதிப்பு, அதிக ரத்த போக்கு, மார்பகங்களில் வலி உள்ளிட்ட பக்க விளைவுகளும் ஏற்படலாம். எனவே இந்த மாத்திரைகளை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்று கூரப்படுகின்றது.