Categories
மாநில செய்திகள்

இந்த மாத இறுதிக்குள் 100% இலக்கு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு அசைவ பிரியர்களுக்காக தற்போது சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 9 தடுப்பு முகாம்கள் நடைபெற்று உள்ளது

இந்நிலையில் திருவொற்றியூர் எண்ணூர் மாநகராட்சியில் உள்ள ஆரம்பப்பள்ளி பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி நேற்று 10 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் 50,000 முகாம்கள் தொடங்கி சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடைபெற்றது.

மேலும் சென்னை மாநகரில் மட்டும் 2,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை முதல் தவணை 75% மற்றும் இரண்டாம் தவணை 38% நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |